Friday, January 8, 2010

காந்தியின் கடைசி வார்த்தை என்ன?

சுட்டுக் கொல்லப்பட்ட போது மகாத்மா காந்தி கடைசியாக சொன்ன வார்த்தைகள் என்ன
என்று ஆராய்ச்சி இப்போது நடக்கிறது.

அவர் "ராம்,ராம்" என்று அலறியபடி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார் என்றுபோலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர் "ஹே! ராம்" என்று சொன்னதாகத்தான் இதுவரைபரவலாகக் கூறப்பட்டுவந்தது.

காந்தியின் படுகொலை பற்றி தில்லியில் துக்ளக் சாலை போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை இப்போதும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
.உருது மொழியில் அந்த எப்.ஐ.ஆர். எழுதப்பட்டுள்ளது

காந்தி சுடப்பட்டதை நேரில் பார்த்த நந்தலால் மேத்தா என்பவர் கொடுத்த வாக்கு மூலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த எப்.ஐ.ஆர். எழுதப்பட்டுள்ளது.

1948 ஜனவரி 30-ம் தேதி காந்தி கொல்லப்பட்டார். பிர்லா இல்லத்தில் இருந்து பிரார்த்தனைக்காக அவர் வெளியே வந்தபோது, நாதுராம் கோட்சே என்பவர் தன்னுடைய
கைத்துப்பாக்கியால் காந்தியை 3 முறை சுட்டார். காந்தியின்  வயிற்றிலும் மார்பிலும் குண்டுகள் பாய்ந்தன. மாலை 5.10 மணிக்கு அவர் கொல்லப்பட்டார்.

பத்திரிகையாளர் தயாசங்கர் சுக்லா, காந்தி பற்றி எழுதிய புத்தகம் விரைவில் வெளிவரவுள்ளது. காந்தி சுடப்பட்ட போது அவரது பேத்தி மனு அருகில் இருந்தார்.தன் உடம்பில் குண்டு பாய்ந்தவுடன் வலியால் துடித்த காந்தி, "ஹே! ரா.. " என்றுகூறியதைக் கேட்டதாக மனு கூறியதாக அந்த புத்தகத்தில் சுக்லா எழுதியிருக்கிறார்.

காந்தியை சுட்டவுடன் அவர் "ஆ" என்று அலறினார்; "ஹே ராம்" என்று சொல்லவில்லை என அவரைக் கொன்ற கோட்சேவும் கூறியிருக்கிறார்.

குண்டு பாய்ந்த சிறிது நேரத்தில் காந்தி உயிர் துறந்தார். கொலைகாரன் கோட்சே உடனே கைது செய்யப்பட்டார்.

Search This Blog